Tuesday, September 24, 2024

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் ஆக.29 வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடலில் திங்கள்கிழமை (ஆக.26) முதல் ஆக.29-ஆம் தேதி வரை மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஆக.26) முதல் ஆக.31 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.26,27-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, ஆக.26 முதல் 29 வரை மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும், குமரிக் கடலிலும் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024