Sunday, September 22, 2024

தெலுங்கு தேசம் Vs ஜேடியு : மக்களவை சபாநாயகர் பதவிக்கு போட்டி ஏன்?

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

தெலுங்கு தேசம் Vs ஜேடியு : மக்களவை சபாநாயகர் பதவிக்கு போட்டி ஏன்? அதன் அதிகாரம் என்ன?மோடியுடன் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்

மோடியுடன் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்

பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சியும், ஜேடியு கட்சியும் மக்களவை சபாநாயகர் பதவியை கோரிவருவதாக கூறப்படும் நிலையில், அதற்கான காரணங்களை பார்க்கலாம்.

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு முக்கிய அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏனெனில், நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகளுடன் ஆதரவுடன் தான் மோடி ஆட்சி அமைத்துள்ளார்.

விளம்பரம்

எனவே, சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் தங்களுக்கு தேவையான மத்திய அமைச்சர் பதவிகளை கேட்டு வாங்கியுள்ளனர். அத்துடன், இரு கட்சிகளும் மக்களவை சபாநாயகர் பதவியை கோரி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு கட்சிகளும் சபாநாயகர் பதவிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

1985ல் 52வது சட்டத் திருத்தத்தின்படி, அரசியலமைப்பு சாசனத்தின் 10வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்சித் தாவல் தடைச் சட்டம்தான் முக்கிய காரணம். அதாவது, ஒரு எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., தானாக முன்வந்து அரசியல் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகி, அவர் மற்றொரு அரசியல் கட்சியில் சேர்ந்தால், அவர் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் மூலம் எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

விளம்பரம்

அதே நேரத்தில், ஒரு கட்சியின் மூன்றில் 2 பங்கு எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.க்கள் வேறொரு கட்சியில் இணைந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை சபாநாயகருக்கே உண்டு. கடந்த 2022ல் மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பினர். இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகரே முடிவெடுக்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

சபாநாயகர் ராகுல் நர்வேகர், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக இருந்ததால், அவரது அணியே உண்மையான சிவசேனா என்று அங்கீகாரம் பெற காரணமாக இருந்தது. இதேபோல், சபாநாயகர் முடிவால் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்க அதிகாரம் உண்டு. நாடாளுமன்றத்தில் எந்த உறுப்பினர் உரையாற்ற வேண்டும், என்ன மாதிரியான கேள்விகள் கேட்கலாம் என்பதை சபாநாயகர்தான் முடிவு செய்வார். மிக முக்கியமாக, அரசாங்கம் நிறைவேற்ற நினைக்கும் மசோதாவை சபாநாயகர் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலையும் சபாநாயகர் தீர்மானிக்கலாம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:
26 வயதில் எம்.பி., 36 வயதில் மத்திய அமைச்சர் – யார் இந்த ராம் மோகன் நாயுடு?

விளம்பரம்

மேலும் மோடி ஆட்சியில் பதவி வகித்து வரும் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் திடீரென 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, காங்கிரஸ் கூட்டணிக்கு போகலாம் என்று முடிவெடுத்தால், அப்போது சபாநாயகரை கொண்டு அவர்களை பாஜக கூட்டணி கட்டுப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதற்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதற்காகவே, இரு கட்சிகளும் மக்களவை சபாநாயகர் பதவிக்கு குறிவைத்திருப்பதாக கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Did you know
,
Lok Sabha Speaker
,
PM Modi
,
Telugu Desam Party

You may also like

© RajTamil Network – 2024