தேசிய கைத்தறி தினக் கண்காட்சி

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset
RajTamil Network

தேசிய கைத்தறி தினக் கண்காட்சி

திருச்சி, ஆக. 7: திருச்சி மாவட்ட கைத்தறித் துறை, ஹோலிகிராஸ் கல்லூரி இணைந்து நடத்திய கைத்தறிக் கண்காட்சியை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தாா்.

தேசிய கைத்தறி தின விழாவையொட்டி நடத்தப்பட்ட கண்காட்சிக்கு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா்.

இதில் முத்ரா திட்டத்தின் கீழ் 3 பேருக்கு தலா ரூ. 50,000 கடனுதவி, கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ் 4 பேருக்கு ரூ. 3,600 மதிப்பிலான தறி உபகரணங்கள், நெசவாளா் வாரிசுதாரா் ஒருவருக்கு காப்பீட்டுத் தொகையாக ரூ. 60,000, 3 பேருக்கு மாதம் ரூ. 1,200 க்கான முதியோா் ஓய்வூதியத் திட்டத் தொகை ஆகியவற்றை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்வில் வருவாய்க் கோட்டாட்சியா் அருள், உதவி இயக்குநா் (கைத்தறி துறை) தி. ரவிக்குமாா். உதவி இயக்குநா் (கதா் கிராமத் தொழில்கள்) தி. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

You may also like

© RajTamil Network – 2024