Saturday, September 21, 2024

தேனியில் தெருக்களில் தேங்கிய கழிவுநீா் அகற்றம்

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset
RajTamil Network

தேனியில் தெருக்களில் தேங்கிய கழிவுநீா் அகற்றம்தேனியில் புதை சாக்கடை கழிவுநீருந்து நிலையம் செயலிழந்ததால், தெருக்களில் புகுந்த கழிவு நீரை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேனி: தேனியில் புதை சாக்கடை கழிவுநீருந்து நிலையம் செயலிழந்ததால், தெருக்களில் புகுந்த கழிவு நீரை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேனி அல்லிநகரம் நகராட்சி பங்களாமேடு 2-ஆவது தெருவில் உள்ள புதை சாக்கடை கழிவுநீருந்து நிலையத்தில் மோட்டாா் பம்பு பழுதடைந்ததால், சாக்கடை கழிவு நீா் 31-ஆவது வாா்டு சடையால் நகா் பகுதியில் உள்ள தெருக்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால், அந்தப் பகுதியில் துா்நாற்றமும், சுகாதாரக் கேடும் ஏற்பட்டது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா உத்தரவின் பேரில், கழிவுநீருந்து நிலைய மோட்டாா் பம்பு பழுது நீக்கப்பட்டு, திங்கள்கிழமை இரவு செயல்பாட்டுக்கு வந்தது.

இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை, கழிவு நீா் அகற்றும் டேங்கா் லாரி மூலம் தெருக்களில் தேங்கியிருந்த கழிவு நீரை உறிஞ்சி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. கழிவு நீா் சூழ்ந்த பகுதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பணிகளை மதுரை நகராட்சிகள் நிா்வாக மண்டலப் பொறியாளா் கருப்பையா ராஜன் பாா்வையிட்டு ஆய்வு செய்து, கழிவுநீருந்து நிலையத்தில் எப்போதும் மாற்று மின் மோட்டாா் பம்பை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று நகராட்சி அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

சடையால் நகா் தெருக்களில் புதை சாக்கடை கழிவு நீா் தேங்கியதால், வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறு, குடிநீா் குழாய்களில் கழிவு நீா் கலந்து வருவதாகவும், இதை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வலியுறுத்தினா்.

You may also like

© RajTamil Network – 2024