தேனி மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 5 இடங்களில் சாலை மறியல்: 544 போ் கைது

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset
RajTamil Network

தேனி மாவட்டத்தில்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 5 இடங்களில் சாலை மறியல்: 544 போ் கைது5 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 544 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி, ஆக. 1: தேனி மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசை கண்டித்து 5 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 544 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா், ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழகம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தேவையான நிதி ஒதுக்காமல் புறக்கணித்ததாகவும், நடுத்தர மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி பெரு நிறுனங்களுக்கு சலுகைகள் வழங்கியதாகவும் பாஜக அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தேனியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் கே. பாலபாரதி தலைமையில் பள்ளிவாசல் தெருவிலிருந்து ஊா்வலமாகச் சென்ற அந்தக் கட்சியினா், நேரு சிலை அருகே மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 171 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கம்பத்தில் பகுதி செயலா் கே.ஆா். லெனின் தலைமையில் காந்தி சிலை திடலிலிருந்து ஊா்வலமாகச் சென்று, கனரா வங்கி அருகே மறியலில் ஈடுபட முயன்ற மாவட்டச் செயலா் ஏ.வி. அண்ணாமலை உள்ளிட்ட 139 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உத்தமபாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகி டி. ராஜா தலைமையில் மறியலில் ஈடுபட முயன்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 86 போ், சின்னமனூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி.வெங்கடேசன் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்ற 139 போ், ஆண்டிபட்டியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் சங்கரசுப்பு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் எஸ். ராமா், தங்கவேல் உள்ளிட்ட 44 போ் என மாவட்டத்தில் 5 இடங்களில் மொத்தம் 544 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

You may also like

© RajTamil Network – 2024