Saturday, September 21, 2024

தேமுதிக தலைமை அலுவலகம் இனி “கேப்டன் ஆலயம்” என அழைக்கப்படும்: பிரேமலதா

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

தேமுதிக தலைமை அலுவலகம் இனி "கேப்டன் ஆலயம்" என அழைக்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தேமுதிக நிறுவனரும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மரியாதை செலுத்தினார்.

நள்ளிரவில் நடுவீதியில் நகைகள் அணிந்து நடக்கும் பெண்… சொல்லப் போனால்

தொடர்ந்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் சிலை திறக்கப்பட்டது. தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், இன்று முதல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் பெயர் கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும்.

புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, திரை பிரபலங்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ஏராளமான கட்சி தொண்டர்கள் தேமுதிக தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024