Wednesday, October 2, 2024

தொடர் விடுமுறை எதிரொலி: மதுரை, தூத்துக்குடி விமான கட்டணம் உயர்வு

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

தொடர் விடுமுறை எதிரொலி: மதுரை, தூத்துக்குடி விமான கட்டணம் உயர்வு

சென்னை: சுதந்திர தின விழா மற்றும் தொடர்விடுமுறையையொட்டி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்தஊர்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் விமான கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன.

சென்னை – மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,063-ல் இருந்து ரூ.11,716 ஆகவும், சென்னை- தூத்துக்குடிக்கு ரூ.4,301-ல்இருந்து ரூ.10,796 ஆகவும்,சென்னை – திருச்சிக்கு ரூ.2,382-ல் இருந்து ரூ.7,192 ஆகவும், சென்னை – கோவைக்கு ரூ.3,369-ல் இருந்து ரூ.5,349 ஆகவும், சென்னை – சேலத்துக்கு ரூ.2,715-ல் இருந்து ரூ.8,277 ஆகவும் உயர்ந்துள்ளது.

இருந்தபோதும், கட்டண உயர்வைப் பற்றி கவலைப்படாமல், விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு, விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024