தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு

by rajtamil
Published: Updated: 0 comment 4 views
A+A-
Reset

புதுடெல்லி,

தொழிலாளர்களுக்கு, குறிப்பாக அமைப்புசாரா துறையில் உள்ளவர்களுக்கு உறுதுணைபுரியும் வகையிலான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய அரசு மாறும் அகவிலைப்படியை (வி.டி.ஏ) திருத்துவதன் மூலம் குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தொழிலாளர் நலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதன்படி அங்கீகாரமற்ற திறனில்லா ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.783 என உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்திற்கு ரூ. 20,358. பகுதி திறன் உள்ளவர்களுக்கு ரூ.868 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு ரூ. 22,568. திறன் உடையவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.954, மாதத்திற்கு ரூ. 24,804 என்றும், திறன்மிகுதி தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.1035 மாதத்திற்கு ரூ. 26,910 ஆக ஊதியம் வகுக்கப்பட்டுள்ளது.கட்டுமானம், சுமைகளை ஏற்றி இறக்குதல், தூய்மைப் பணி, சுரங்கம் உள்ளிட்ட பலதுறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பயன் பெறுவார். தொழிலாளர்களுக்கான திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அக். 1 முதல் அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024