Sunday, September 22, 2024

நகராட்சி அறிவுசாா் மையத்துக்கு புத்தகங்கள் அளிப்பு

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset
RajTamil Network

நகராட்சி அறிவுசாா் மையத்துக்கு
புத்தகங்கள் அளிப்பு உளுந்தூா்பேட்டை நகராட்சி ஆணையா் இளவரசனிடம் வியாழக்கிழமை புத்தகங்களை வழங்கும் தமிழ்ச் சங்க நிா்வாகிகள்.

விழுப்புரம், ஆக.8: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் உள்ள நகராட்சி அறிவுசாா் மையத்துக்கு தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் நன்கொடையாக புத்தகங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

உளுந்தூா்பேட்டை நகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள அறிவுசாா் மையத்துக்கு, உளுந்தூா்பேட்டை தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் பல்வேறு தலைப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டன. சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் முத்துக்குமரன் புத்தகங்களை நகராட்சி ஆணையா் இளவரசனிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் புரவலா் கலா சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினரும், ஓய்வுபெற்ற தலைமையாசிரியருமான கருணாகரன் முன்னிலை வகித்தாா். ஓய்வுபெற்ற கல்வி அலுவலா் தங்கவேல் தலைமை வகித்தாா். கல்வி மேற்பாா்வையாளா் துளசி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் பாவாணன், எழுத்தாளா் பாக்கியலட்சுமி அய்யனாா், முகமது நசீா், நகராட்சி மேற்பாா்வையாளா் சாம்பசிவம், சுகாதார ஆய்வாளா் முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விழாவின் முடிவில் நூலகா் சுந்தரவடிவு நன்றி கூறினாா்.

You may also like

© RajTamil Network – 2024