இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான வினோத் காம்ப்ளி நடக்க சிரமப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இவர் விளையாடிய கால கட்டத்தில் சிறந்த வீரராக போற்றப்பட்டார். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரும் ஆவார். இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளிலும் 104 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள வினோத் காம்ப்ளி, அதில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
இதனிடையே தற்போது 52 வயதான வினோத் காம்ப்ளி அடிக்கடி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் வினோத் காம்ப்ளி தற்போது நடக்க சிரமப்படும் வீடியோ வெளியாகி ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் பைக்கின் மீது சாய்ந்தபடி இருக்கும் அவரை சிலர் தாங்கிப் பிடித்தபடி அழைத்து செல்லும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இதனைக்கண்ட ரசிகர்கள் வினோத் காம்ப்ளியின் நிலையை பார்த்து வேதனை தெரிவித்து வருகின்றனர்.
Vinod Kambli's bad condition. pic.twitter.com/2NHb5H55jT
— niyazi fazal (@fazal_niyazi) August 5, 2024