Friday, September 20, 2024

நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

புதுடெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. பிரதமர் மோடி 3-வது முறையாக வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றார்.

நரேந்திர மோடி தலைமையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கி உள்ளன. வருகிற 9-ம் தேதி மாலை 6 மணிக்கு 3-வது முறை பிரதமராக மோடி பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்கதேசம், இலங்கை, பூடான், நேபாளம், மொரிஷியஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மார்ச் 16-ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் திரும்பப் பெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

#BREAKING || தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தன
மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டது
மார்ச் 16ம் தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலில் இருந்தது
தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் இருந்து… pic.twitter.com/SFuNyiBV7A

— Thanthi TV (@ThanthiTV) June 6, 2024

You may also like

© RajTamil Network – 2024