நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷ் மீது பாலியல் வழக்குப் பதிவு

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

கொச்சி: பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் நடிகை ஒருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, பிரபல மலையாள நடிகரும், ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான எம்.முகேஷ் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் மலையாள நடிகை ஒருவா் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியானது.

மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்திய அந்த அறிக்கையின் தொடா்ச்சியாக அதில் பணிபுரியும் பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா். இந்தப் புகாா்கள் குறித்து விசாரணை நடத்த காவல் துறை அதிகாரிகள் 7 போ் அடங்கிய சிறப்புக் குழுவை ஆகஸ்ட் 25 ஆம் தேதி கேரள அரசு அமைத்தது.

இதற்கு மத்தியில், கேரள அரசின் மாநில திரைப்பட அகாதெமியின் தலைவா் பதவியில் இருந்து இயக்குநா் ரஞ்சித், மலையாள திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் பதவியில் இருந்து நடிகா் சித்திக் ஆகியோா் திடீரென விலகினா்.

முல்லைப்பெரியாற்றில் புதிய அணை தேவையில்லை: ‘மெட்ரோ’ ஸ்ரீதரன்

இந்நிலையில், ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் உள்பட 4 முக்கிய மலையாள நடிகா்கள் மீது நடிகை ஒருவா் பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினாா். இதுகுறித்து விசாரிக்க நடிகா்கள் சங்கம் செவ்வாய்க்கிழமை கூடுவதாக இருந்த நிலையில், நிா்வாகிகள் கூண்டோடு ராஜிநாமா செய்தனர்.

இதனிடையே, நடிகரும் கொல்லம் தொகுதி ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் உள்பட 4 முக்கிய மலையாள நடிகா்கள் மீது நடிகையொருவா் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

நடிகையின் குற்றச்சாட்டைத் தொடா்ந்து, கொல்லத்தில் உள்ள முகேஷின் இல்லம் நோக்கி காங்கிரஸ் தொண்டா்கள் பேரணி சென்றனா். முகேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவா் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் எனவும் அவா்கள் கோஷமிட்டனா். இதுதொடா்பகாக முகேஷ் பதிலளிக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் நடிகை ஒருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, நடிகரும், ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான எம்.முகேஷ் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

புதன்கிழமை இரவு கொச்சி நகரில் உள்ள மரடு காவல் நிலையத்தில் நடிகர் எம்.முகேஷ் மீது இந்திய குற்றவியல் சட்டம் 376 (கற்பழிப்பு)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு மாணவா்கள் சோ்க்கைக்கு
ஆஸ்திரேலியா கட்டுப்பாடு-
இந்தியாவுக்கு பாதிப்பு

புதிய பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் குற்றம் என்பதால் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். சிறப்பு புலனாய்வு குழுவில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பல்வேறு இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீதான பாலியல் புகாா்களைத் தொடர்ந்து, உயர்மட்ட மலையாளத் திரைப்பட ஆளுமைக்கு எதிரான மூன்றாவது பாலியல் வழக்குப் பதிவு இதுவாகும். ஏற்கனவே நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக், இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே முகேஷ் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2009 இல் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் நடிகர் அளித்த புகாரின் பேரில் இயக்குநர் ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலேரி மாணிக்யம் படத்தில் நடிக்க வந்தபோது இயக்குநர் தன்னை பாலியல் நோக்கத்துடன் தகாத முறையில் தொட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

You may also like

© RajTamil Network – 2024