நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கின் விசாரணை நவ.21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இருவரும் நேரில் ஆஜராகாததால் சென்னை குடும்ப நல நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது. விவாகரத்து கோரிய வழக்கில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் மூன்றாவது முறையாக ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ்-ஐஸ்வா்யா திருமணம் 2004-ஆம் ஆண்டு நவ. 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். சுமாா் 20 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னா், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனா்.
திருப்பதி தேவஸ்தானத்தில் முஸ்லிம்கள் அறங்காவலர்களாக முடியுமா? ஓவைசி கேள்வி!
2022-ஆம் ஆண்டு இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டனா். தனுஷ் மற்றும் ஜஸ்வா்யா இடையே உள்ள பிரச்னையை தீா்க்க அவா்களுடைய குடும்பத்தினா் மற்றும் நண்பா்கள் ஈடுபட்டனா். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அதில் 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.