Wednesday, October 30, 2024

நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன்!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ரசிகரைக் கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையிலும் தர்ஷனின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதனிடையே, முதுகு தண்டு அறுவை சிகிச்சைக்காக இடைக்கால ஜாமீன் கோரி கடந்த மாதம் அமர்வு நீதிமன்றத்தில் தர்ஷன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தர்ஷன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ஜாமீன் மனு செவ்வாய்க்கிழமை விசாரித்து முடிக்கப்பட்டது.

இதையும் படிக்க : அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா தவெக?

இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி, தர்ஷனுக்கு 6 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

பெங்களூருவில் சிறந்த மருத்துவர்கள் இருக்கும் பட்சத்தில், தர்ஷன் தரப்பினர் ஏன் மைசூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ஒரு வாரத்துக்குள் தர்ஷனின் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யவும், சிகிச்சைக்கு எவ்வளவு காலம் தேவை என்பதை குறிப்பிடவும் உத்தரவிட்டார்.

அதேபோல், தர்ஷனின் கடவுச் சீட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024