Saturday, September 21, 2024

நடிகர் மஹத்தின் ‘காதலே காதலே’ படத்தின் அப்டேட்

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

நடிகர் மஹத் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் மஹத். இவர் மங்காத்தா, ஜில்லா, 600028 – 2, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இவர், தற்போது 'காதலே காதலே' எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கணேஷ், ரவீனா ரவி உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் பொழுது போக்கு அம்சத்துடன் இக்காலத்து இளைஞர்களின் காதலையும் அவர்கள் ஒரு உறவை எப்படி அணுகுகிறார்கள் என்பதை குறித்த படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தை பிரேம் நாத் எழுதி இயக்குகிறார். கீதா கோவிந்தம் படத்துக்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் இப்படத்துக்கு இசையமைக்க, ஸ்ரீ வாரி பிலிம் தயாரிக்கிறது. இப்படத்தின் பாடல் உரிமையை சரிகமா நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில், 'காதலே காதலே' படத்தின் அறிவிப்பு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Here it is #KadhaleKadhale Audio Rights bagged by @saregamasouth ▶️ https://t.co/1ELTDYa8JAStarring @mahatofficial@meenakshiGovin2@srivaarifilm@offBharathiraja@vtvganeshoff@raveena116@RajAyyappamv@composer_Vishal@premragunathan@PradeepAnandhan@ViyanPugz… pic.twitter.com/IOme5EZL39

— Mahat Raghavendra (@MahatOfficial) August 16, 2024

Original Article

You may also like

© RajTamil Network – 2024