Saturday, September 21, 2024

நடிகர் விஜய்யை சந்தித்து வாழ்த்துப் பெற்ற ‘மகாராஜா’ படக்குழு!

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

‘மகாராஜா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை,

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் 'மகாராஜா'. இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. விஜய் சேதுபதியின் 50- வது திரைப்படமான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கும் ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மக்களின் வரவேற்பை பெற்றது. ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார். இதன் எதிரொலியால், படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது. திரை வெற்றியைத் தொடர்ந்து ஓ.டி.டி.யிலும் மக்களின் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், விஜய்யுடன் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Nithilan Saminathan (@dir_nithilan)

Original Article

You may also like

© RajTamil Network – 2024