Wednesday, September 25, 2024

நமீபியாவில் நிலவும் கடும் வறட்சி.. யானைகளை கொல்ல திட்டம்!

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

நமீபியாவில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, உணவுக்காக யானைகளை கொல்ல திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் கடந்த அரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவிலான கடும் வறட்சி காரணமாக பசியால் வாடும் 14 லட்சம் மக்களுக்கு உணவளிக்க காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இதுபற்றி நமீபியா சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமீபிய அரசியலமைப்பு சட்டத்தின்படி நாட்டிலுள்ள இயற்கை வளங்களை நாட்டுமக்களுக்கு பயன்படுத்தும் வகையில் 83 யானைகள் உள்பட 723 காட்டு விலங்குகளை கொல்லும் திட்டம் மிகவும் அவசியமானது என்று தெரிவித்துள்ளது.

ஒரு நல்ல ஆரோக்கியமான காட்டு விலங்குகளின் இறைச்சி நல்ல உணவாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகளின் ஆப்பிரிக்க சுற்றுச்சூழல் திட்ட இயக்குநர் ரோஸ் மெபாசா கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபை உலக உணவுத் திட்டத்தின்கீழ் ஜூன் மாதம் நடத்திய ஆய்வில், சுமார் 30 லட்சம் மக்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிவந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் வறட்சி பொதுவானதானது தான் என்றாலும், கடந்த பத்து ஆண்டுகளில் 2018 – 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கடுமையான வறட்சியை சந்தித்துள்ளதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

இயற்கையாக நிகழும் காலநிலை மாற்றமான எல் நினோவின் காரணமாக சில பகுதிகளில் வெப்பமான, வறண்ட வானிலையால் ஏற்பட்ட வறட்சியால் வேளாண் பயிர்கள் காய்ந்து உணவில்லாமல் கால்நடைகள் அனைத்தும் உயிரிந்ததால் காட்டு விலங்குகள் உணவாக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான காட்டுவிலங்குகளில், யானைகளைத் தவிர்த்து, 300 வரிக்குதிரைகள், 30 நீர்யானைகள், 50 இம்பாலா என்றழைக்கப்படும் மான் வகைகள், 60 எருமைகள், 100 காட்டெருமைகள் மற்றும் 100 எலாண்ட்ஸ் (ஒரு வகை மான்) ஆகியவற்றைக் கொல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விலங்குகள் இறைச்சிக்காக மட்டும் கொல்லப்படுவதில்லை. விலங்குகளும் மனிதர்களும் தண்ணீர் மற்றும் தாவரங்கள் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. யானைகள் தாவர உண்ணியைச் சேர்ந்ததாக இருந்தாலும் அவை மனிதர்களை கொல்லக்கூடியவை. கடந்த ஆண்டு மட்டும் ஜிம்பாப்வேயில் யானை தாக்கியதில் 50 பேர் பலியாகினர்.

பொதுவாக, காட்டுவிலங்குகள் கடுமையான வறட்சியின் போது இடம்பெயர்ந்து வேறு இடத்துக்குச் செல்லும். ஆனால், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அவை வேறு இடங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் அவற்றை கொல்லுவது மட்டுமே ஒரே தீர்வாகும்.

வறட்சியால் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நமீபியாவின் 84 சதவீத உணவு வளங்கள் ஏற்கனவே தீர்ந்துவிட்டன. நமீபியாவுக்கு கடந்த மாதம் கூடுதலாக 49 லட்சம் டாலர் உதவியை அமெரிக்க உதவி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, 157 விலங்குகள் கொல்லப்பட்டு அவற்றில் இருந்து சுமார் 63 டன் இறைச்சி கிடைத்துள்ளது.

13 அடி உயரம் மற்றும் 13,000 பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ள யானைகள், தாவரங்களை அதிக அளவில் உட்கொள்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 300 பவுண்டுகள் தாவரங்களை உண்ண முடியும் என்று டாக்டர். ஸெய்ட்லர் கூறியுள்ளார்.

நமீபியா மற்றும் மற்ற நான்கு தென்னாப்பிரிக்க நாடுகளில் உள்ள உலகின் மிகப்பெரிய ஆப்பிரிக்க சவன்னா யானைகள் அதிகளவில் உள்ளன. இவை அழிந்து வரும் பட்டியலில் உள்ளன. கடந்த மூன்று தலைமுறைகளில் அவற்றின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.

ஆனால் சமீப ஆண்டுகளில், 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, யானைகளின் எண்ணிக்கை 227,000-க்கும் அதிகமான யானைகளுடன் குறையாமல் இருக்கிறது.

ஆனால், இப்போது, ​​கடுமையான வறட்சியால், உணவுக்காக யானைகள் கொல்லப்படும் சூழ்நிலையில், அவற்றின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024