Tuesday, September 24, 2024

நர்ஸ் உடன் காதல்… மனைவி, குழந்தைகளைக் கொலை செய்த பிசியோதெரபிஸ்ட்…

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

நர்ஸ் உடன் காதல்… மனைவி, குழந்தைகளைக் கொலை செய்த பிசியோதெரபிஸ்ட்…நர்ஸ் உடன் காதல்... மனைவி, குழந்தைகளைக் கொலை செய்த பிசியோதெரபிஸ்ட்...

நர்ஸ் உடன் காதல்… மனைவி, குழந்தைகளைக் கொலை செய்த பிசியோதெரபிஸ்ட்…

தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொலை செய்துவிட்டு, எந்தவித குற்றவுணர்ச்சியும் இன்றி கிட்டத்தட்ட 45 நாட்களுக்கும் மேலாக தனது காதலியுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஒருவர். இவருடைய பெயர் போடா பிரவீன்.

32 வயதாகும் போடா பிரவீன், மே 28 அன்று தனது மனைவி குமாரி (29) மற்றும் மகள்கள் கிருஷிகா (5), கிருத்திகா (3) ஆகியோரை தனது காதலி சோனி பிரான்சிஸின் பேச்சைக் கேட்டு கொன்றதோடு, அதை கார் விபத்தாக மறைத்து நாடகமாடியுள்ளார்.

விளம்பரம்

பிரவீன் தனது மனைவிக்கு அதிக அளவு மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி கொன்றுள்ளார். இந்த ஊசியை செலுத்தியதால் அவரது மனைவி இறந்து போயுள்ளார். இதையடுத்து, முன் இருக்கையில் இருந்த இரு மகள்களையும் மூக்கு, வாயை மூடி கொடூரமாக கொன்றுளார்.

இந்தச் சம்பவம் நடந்து 48 நாட்களுக்கு பிறகு பிரவீனை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் லேசான காயம் ஏற்பட்டதாக எல்லாரையும் நம்ப வைத்து அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதோடு எதுவும் நடக்காதது போல் மீண்டும் ஹைதராபாத் வந்து தனது இயல்பு வாழ்க்கையை நடத்தியுள்ளார் என கம்மம் மாவட்டத்தின் ரகுநாதபாலம் காவல் நிலையத்தின் தலைமை அதிகாரி கொண்டல் ராவ் கூறுகிறார்.

விளம்பரம்

“ஆரம்பத்தில், குமாரியின் உடலில் இருந்த ஊசி தழும்புகளைப் பார்த்து நாங்கள் சந்தேகப்பட்டோம். ஆனால் குமாரி மற்றும் குழந்தைகளின் உடலில் வேறு எங்கும் காயங்கள் எதுவும் இல்லை. பிரேத பரிசோதனைக்கு பின், இறந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம். அதே நாளில், விசாரணைக் குழு குற்றம் நடந்த இடத்தை பார்வையிட்டது. பிரவீன் எங்களிடம் கூறிய அளவிற்கு விபத்து பெரிதாக இல்லை என்பதை கண்டுபிடித்தோம். கார் முழுவதையும் தேடி பார்த்த போது, அதில் ஒரு ஊசி இருந்தது. அது காலியாக இருந்தாலும் அதை இந்த வழக்கிற்கு கிடைத்த ஒரு துப்பாக நாங்கள் கருதினோம் என கொண்டல் ராவ் நியூஸ் 18-க்கு தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் விசாரணைக்காக அந்த ஊசியை தடயவியல் ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், போலீசார் பிரவீனை எந்த விசாரணைக்கும் அழைக்காததால், அவர் தனது இயல்பு வாழ்க்கையை நடத்தி வந்தார். அவர் ஹைதராபாத்தில் உள்ள அத்தாபூர் பகுதியில் உள்ள ஜெர்மன்டன் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக பணியாற்றி வந்தார்.

இதையும் படிங்க: அம்மன் வழிபாட்டிற்கு உகந்த ஆடி மாதம்… என்னென்ன சிறப்புகள் தெரியுமா..?

பிரவீன் பிசியோதெரபிஸ்ட்டாகப் பணிபுரியும் மருத்துவமனையில் தான், அவருடைய காதலி சோனி பிரான்சிஸ் செவிலியராக இருக்கிறார். இவர்கள் இருவரும் ஒன்றாக வாடகை வீட்டில் தங்கியிருந்ததாகவும், குமாரியின் உறவினர்கள் அடைந்த வேதனையை அவர் கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.

விளம்பரம்

“கிட்டத்தட்ட 45 நாட்களாக நாங்கள் அவரை எந்த விசாரணைக்கும் அழைக்காததால் இதிலிருந்து தப்பிவிட்டோம் என நினைத்துள்ளார் பிரவீன். முதலில் இதை விபத்து வழக்காகப் பதிவு செய்ததால், வழக்கில் இருந்து முற்றிலும் தப்பிவிட்டோம் என்ற எண்ணத்தில் அவர் இருந்தார். ஊசியின் தடயவியல் அறிக்கை கிடைத்தவுடன், ஐதராபாத்தில் உள்ள அத்தாபூர் பகுதியில் பிரவீனை கைது செய்தோம். எங்கள் விசாரணையில் அனைத்தும் உண்மையும் வெளிவந்துள்ளது” என்றார் கொண்டல் ராவ்.

மேலும் இந்த கொலைக்கு பயன்படுத்திய மருந்தை வேறு யாரும் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால், அதன் பெயரை போலீசார் வெளியிடவில்லை.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Husband Wife
,
Local News
,
Telangana

You may also like

© RajTamil Network – 2024