Tuesday, September 24, 2024

நாகப்பாம்பு விஷ முறிவுக்கு ரத்த உறைதல் தடுப்பு மருந்துகளே போதும்: புதிய ஆய்வில் தகவல்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

நாகப்பாம்பு விஷ முறிவுக்கு ரத்த உறைதல் தடுப்பு மருந்துகளே போதும்: புதிய ஆய்வில் தகவல்பாம்புகடி விஷ முறிவுக்கு ரத்த உறைதல் தடுப்பு மருந்துகளே போதும் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஊசி – மருந்து (கோப்புப்படம்)

நாகப்பாம்பு விஷ முறிவு சிகிச்சையில் மிகப்பெரிய முன்னேற்றமாக, சாதாரண ரத்த உறைதல் தடுப்பு மருந்துகளே போதுமானது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உலகம் முழுவதும் நாகப்பாம்பு விஷ முறிவுக்கான சிகிச்சையில் மிகப்பெரிய முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது.

சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் டிராபிகல் மருத்துவ லிவர்பூர் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து நடத்திய ஆய்வில், ஹெபரின் என்ற, சாதாரண ரத்த உறைதல் தடுப்பு மருந்தே, நாகப்பாம்பு விஷ முறிவுகளுக்கான சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்துள்ளனர்.

அறிவியல் மொழிபெயர்ப்பு மருத்துவம் என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், ஹெபரின் போன்ற ரத்த உறைதல் தடுப்பு மருந்துகள், நாகப்பாம்பு போன்ற விஷப் பாம்புகள் கடித்து அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் மூலம், விஷப் பாம்புகள் கடித்து அதனால் ஏற்படும் மிக மோசமான விளைவுகள் மற்றும் ரத்த நாளங்கள் சிதைவு போன்றவை தவிர்க்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

சிட்னி பல்கலை பேராசிரியர் கிரேக் நீலே கூறுகையில், நாகப் பாம்புகள் கடிப்பதால் ஏற்படும் மிக மோசமான விளைவுகளிலிருந்து காக்க எங்களது கண்டுபிடிப்பு உதவும் என்று நம்புகிறோம், இது விஷத்தின் வீரியத்தைக் குறைக்கும், இதனால், பாம்புக் கடித்து உயிர் பிழைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நாகப்பாம்பின் விஷம், மனிதர்களின் செல்களை தாக்கும் விதத்தைக் கண்டறிய, விஞ்ஞானிகள் சிஆர்ஐஎஸ்பிஆர் மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நாகப்பாம்பு விஷ முறிவுக்கு மாற்று மருந்தாக ஹெபரின் செயல்பட்டு தசை சிதைவுக்குக் காரணமாக இருக்கும் விஷத்தை முறிப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம், உலகம் முழுவதும் விஷப்பாம்புகள் கடித்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, தற்போது, ஆண்டுதோறும் பாம்புக் கடிக்கு 1.4 லட்சம் பேர் பலியாகிறார்கள், 4 லட்சம் பேர் உடல்நலம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில்தான் நாகப்பாம்புகள் அதிகம் வாழ்கின்றன என்பதால், பாம்புக் கடி சம்பவங்களும் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், உள்ளூர் விஷப்பாம்புகளின் விஷ முறிவுக்கு, தற்போது பயன்பாட்டில் உள்ள விஷ முறிவு மருந்துகள் பயனற்றவையாக உள்ள நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வலியுடன் கூடிய வீக்கம், கொப்புளங்கள் அல்லது கடிபட்ட இடத்தைச் சுற்றியிருக்கும் தசைகள் சிதைவு போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆராய்ச்சியின் பலனாக, 2030ஆம் ஆண்டுக்குள் பாம்புக் கடி மரணங்களை பாதியாகக் குறைக்க வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின், இலக்கு நிச்சயம் எட்டப்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டளள்து.

மேலும், ஹெபரின் மருந்தானது விலை மலிவானது என்பதும், நாடு முழுவதும் கிடைப்பதும் எளிது என்பதால், மனிதர்களிடம் பரிசோதனை நடத்தி முடித்து உடனடியாகப் பயன்பாட்டுக்கு வரப்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

You may also like

© RajTamil Network – 2024