நாக தோஷமா..? நாளை இந்த வழிபாட்டை செய்ய மறக்காதீங்க..!

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

நாகங்களை துன்புறுத்துவதும், கொல்வதும் மிகப் பெரிய பாவம் என சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

ஆடி மாதத்தின் திதிகள், நட்சத்திரங்கள், கிழமைகள் மனித குலத்திற்கு புண்ணிய பலன்களை வாரி வழங்கும் வல்லமை படைத்தவைகள். இதில், நாக சதுர்த்தியும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாக சதுர்த்தியும், வளர்பிறை பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு நாளை (8.8.2024) நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. நாக சதுர்த்தி நாளில் நாக தேவதைகளை வழிபடவேண்டும்.

இந்துக்களின் வழிபாட்டு முறைகளின் படி நாகங்கள் தெய்வங்களாக வழிபடக் கூடியவையாகும். நாகங்களை துன்புறுத்துவதும், கொல்வதும் மிகப் பெரிய பாவம் என கூறப்பட்டுள்ளது. நாமோ, நம்முடைய முன்னோர்களால் தெரியாமல் துன்பம் ஏற்படுத்தி இருந்தால் அது ஜாதகத்தில் நாக தோஷம், சாபமாக ஏற்பட்டிருக்கும். கடுமையான நாக தோஷம் உள்ளவர்கள் அரசமரமும் வேப்பமரமும் உள்ள இடத்தில் நாகங்களை சிலையாகச் செதுக்கி பிரதிஷ்டை அபிஷேகம் செய்து பூஜிக்கவேண்டும். மற்றவர்கள் அரசமரத்தடியில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால், தண்ணீர் அபிஷேகம் செய்யவேண்டும்.

பால் ஊற்றி விட்டு தண்ணீர் ஊற்றி சிலையை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு நாகர் சிலையின் தலை முதல் வால்முடிய மஞ்சளை தடவி, சந்தனம், குங்குமத்தினால் அலங்கரித்து, பூமாலைகளை அணிவித்து பஞ்சினால் செய்த கோடிதந்தியம், வஸ்திரம் அணிவித்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் புஷ்பங்களினால் அலங்கரித்து, பூ அட்ஷதையுடன் சர்க்கரை பொங்கல், துள்ளு மாவு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, படைக்க வேண்டும். கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்தால் அனைத்து விதமான தடைகளும் விலகும் என்பது ஐதீகம்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

You may also like

© RajTamil Network – 2024