Friday, September 20, 2024

நாடு முழுவதும் 3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி – மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

by rajtamil
Published: Updated: 0 comment 20 views
A+A-
Reset

டெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். பதவியேற்பு விழா நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

மோடி பிரதமராக 3வது முறையாக பதவியேற்றபின் அவர் தலைமையில் முதல் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி உதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு கழிவறை, கியாஸ் சிலிண்டர் இணைப்பு, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படை வழங்கப்படும்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் 2015-16ம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் கடந்த 10 ஆண்டுகளில் ஏழை குடும்பங்களுக்கு 4.21 கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024