நாட்டில் 50% அரசு மருத்துவர்களின் பரிந்துரைகள் விதிமுறைப்படி இல்லை: ஆய்வு

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

நாட்டில் 50% அரசு மருத்துவர்களின் பரிந்துரைகள் விதிமுறைப்படி இல்லை: ஆய்வுநாட்டில் புறநோயாளிகள் பிரிவில், 50 சதவீத அரசு மருத்துவர்களின் பரிந்துரைகள் விதிமுறைப்படி இல்லை என்று ஆய்வு தெரிவிக்கிறது.மருத்துவமனை (கோப்புப்படம்)

!

புது தில்லி: நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்களின் பரிந்துரைகள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இருப்பதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

சஃப்தர்ஜங்கில் உள்ள எய்ம்ஸ் உள்ளிட்ட நாட்டின் மிக முன்னணி அரசு மருத்துவமனைகளில் இருக்கும் பாதி மருத்துவர்களின் பரிந்துரைகள், தரமான சிகிச்சைக்குரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இருப்பதில்லை என்ற ஆய்வு முடிவு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றியிருக்காவிட்டாலும், அது பெரும்பாலும் நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது, மேலும், 10 சதவீத மருத்துவப் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருப்பதாகவும், சில மருந்துகள் ஒன்றோடு ஒன்று பொருந்தாதவை, பொறுப்பில்லாத வகையில், சிகிச்சைக்கான செலவை அதிகரிப்பதாக, அதிக பக்கவிளைவுகளைக் கொண்டதாகவும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில நோய்களுக்கு, மருத்துவர்கள் இருவேறுவிதமான ஆண்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பதை இங்கு உதாரணமாக கூறுகிறார்கள். அவ்வாறு இரண்டு ஆண்டிபயாடிக்குகளை பரிந்துரைக்கும்போது, அதனை எடுத்துக்கொள்ளும் நோயாளிக்கு, ஆண்டிபயாடிக் தடுப்புச் சந்தி ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், சிகிச்சைக்கான செலவு அதிகரிக்கும், இதுதான் ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலான மருத்துவப் பரிந்துரையாக உள்ளது. ஏற்றுக்கொள்ளக்கூடிய பரிந்துரையாக இருப்பது, மருந்துகளின் தொடர்ச்சியின்மை, மருந்துகளின் அளவில் மாறுபாடு, எடுத்துக்கொள்ளும் காலம், ஒருநாளைக்கு எத்தனை முறை எவ்வளவு மருந்து எடுத்துக்கொள்வது என்பதில் தவறான அளவீடுகளை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதாகும்.

நாடு முழுவதுமிருக்கும் பல்வேறு மருத்துவமனைகளில், புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் அளித்த 4,838 பரிந்துரைகள் இந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. மருந்துகளை பரிந்துரைத்த மருத்துவர்களில் அனைவருமே தங்களது துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், சராசரியாக நான்கு முதல் 18 ஆண்டுகள் மருத்துவத் துறையில் அனுபவம் பெற்றவர்களாக இருந்தனர்.

You may also like

© RajTamil Network – 2024