நானி நடித்த ‘ஹிட் 3’ படத்தின் டைட்டில் புரோமோ வெளியானது

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

சினிமாவில் 16 வருடங்கள் நிறைவடைய இருப்பதையொட்டி நானியின் 32வது படத்தின் டைட்டில் புரோமோ வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரது முந்தைய படங்களான 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா' திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. நானியின் 30-வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். 31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்துள்ளார்.

டிடிவி நிறுவனம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம் ஆகஸ்ட் 29 ம் தேதி வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிற நிலையில் உலகம் முழுவதும் முதல்நாளில் ரூ.25 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. இதுவரை 75 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

இப்படத்தை தொடர்ந்து நானி அடுத்து இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார். கோர்ட் என்ற படத்திலும் மற்றும் நானியின் 32 படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் நானியின் 32 -வது படத்தின் டைட்டில் புரோமோ மற்றும் படத்தின் பெயர் வெளியாகவுள்ளது. படத்திற்கு ஹிட் 3 என பெயரிட்டுள்ளனர். படத்தின் டைட்டில் புரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. புரோமோவில் மிகவும் ஸ்டைலாக வாயில் சுருட்டுடன் ஜீப்பை ஓட்டுகிறார். எதொ ஒரு கிரிமினலை கொலை செய்துவிட்டு ரத்தகறையுடன் வண்டியை ஓட்டிச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

நானியின் முதல் திரைப்படம் 'அஷ்ட சம்மா' திரைப்படம் 2008ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வெளியானது. 16 வருட சினிமா பயணம் தெலுங்கு சினிமாவில் 16 வருடங்கள் நிறைவடைய இருப்பதையொட்டி இன்று நானியின் 32வது படத்தின் டைட்டில் புரோமோ வெளியாகியுள்ளது.

Less of a cop More of a criminal Arjun Sarkaar takes charge #Nani32 is #HITTheThirdCase Blood gates will open May 1st 2025 #Hit3 Hunter’s Command https://t.co/mrlICAmlPqpic.twitter.com/d4Uj3TfkHU

— Nani (@NameisNani) September 5, 2024

Original Article

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024