Saturday, October 19, 2024

நார்வே அணிக்காக அதிக கோல்கள்..! தந்தையாகும் ஹாலண்ட்?

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

நார்வே நாட்டின் பிரபல கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் அதிக கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.

ஸ்லோவேனியா அணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் நார்வே அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 7, 62ஆவது நிமிடங்களில் எர்லிங் ஹாலண்ட் கோல் அடித்து அசத்தினார்.

இதன்மூலம் நார்வே அணிக்காக அதிக கோல் அடித்தவர் பட்டியலில் ஜோர்கன் ஜுவ் (33 கோல்கள்) உடன் சமன்செய்தார். ஜோர்கன் ஜுவ் 45 போட்டிகளில் செய்த சாதனையை எர்லிங் ஹாலண்ட் 36 போட்டிகளில் செய்து முடித்துள்ளார்.

90 ஆண்டுகால சாதனையை சமன்செய்துள்ளார் எர்லிங் ஹாலண்ட் 36.

யார் இந்த எர்லிங் ஹாலண்ட்?

நார்வேயின் தேசிய அணியில் 2019இல் அறிமுகமானார் எர்லிங் ஹாலண்ட். 36 போட்டிகளில் 33 கோல்கள் அடித்துள்ளார்.

24 வயதாகும் எர்லிங் ஹாலண்ட் 41 யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் சாம்பியன்ஷிப்பில் 42 கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எர்லிங் ஹாலண்ட் மொத்தமாக 235 கிளப் கோல்களை அடித்துள்ளார்.

தனது 105ஆவது போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக 100ஆவது கோலை அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையுடன் சமன்செய்ததும் குறிப்பிடத்தக்கது.

தந்தையாகும் எர்லிங் ஹாலண்ட்?

இந்தப் போட்டிக்கு பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் குழந்தையின் எமோஜியைப் பதிவிட்டு விரைவில் எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, விரைவில் தந்தையாகப்போகிறார் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

pic.twitter.com/vD3jBv4mw3

— Erling Haaland (@ErlingHaaland) October 10, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024