நாளை ஆவணி அவிட்டம்: பூணூல் மாற்ற உகந்த நேரம்

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

பிராமண குலத்தவர்கள் நீர்நிலைகளின் அருகில் அல்லது ஏதேனும் ஒரு கோவிலில் ஒரு குழுவாக சேர்ந்து புரோகிதர் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள்.

ஆவணி மாதத்தில் பவுர்ணமியும், அவிட்டம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளையே ஆவணி அவிட்டமாக கொண்டாடுகிறோம். இது வேதங்கள் அவதரித்த நாளாகவும், இந்த நாளில்தான் பெருமாள் ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன. அதனால் இதை ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடுவதுண்டு.

ஆவணி அவிட்டம் என்று சொன்னாலே, பூணூல் மாற்றும் ஒரு நிகழ்வு என்று தான் முதலில் நினைவுக்கு வரும். பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள், குறிப்பாக பிராமண குலத்தவர்கள் விடியற்காலையிலேயே குளித்து நீர்நிலைகளின் அருகில் அல்லது ஏதேனும் ஒரு கோவிலில் ஒரு குழுவாக சேர்ந்து புரோகிதர் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள்.

பூணூல் மாற்றும் நேரம்:

இந்த ஆண்டு ஆவணி அவிட்டம் நாளை (ஆகஸ்ட் 19) வருகிறது. நாளை அதிகாலை 03.07 மணி தொடங்கி, நாளை மறுநாள் (ஆகஸ்டு 20) அதிகாலை 01.09 வரை பவுர்ணமி திதி உள்ளது. அதே சமயம், நாளை காலை 09.09 மணிக்கு பிறகுதான் அவிட்ட நட்சத்திரம் தொடங்குகிறது. நாளை மறுநாள் காலை 07.50 வரை அவிட்ட நட்சத்திரம் உள்ளது. இருந்தாலும் பிரம்ம முகூர்த்த வேளையில் செய்யும் காரியங்களுக்கு நாள், நட்சத்திரம், கிழமை என எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பார்கள். அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த வேளையில் பூணூல் மாற்றிக் கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.

அதற்கு பிறகு பகல் 12 முதல் 1 மணி வரை நல்ல நேரம் இருப்பதால் இந்த நேரத்திலும் பூணூல் மாற்றிக் கொள்ளலாம். ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தப்படும்.

You may also like

© RajTamil Network – 2024