நாளை சென்னை புறநகர் ரெயில் சேவைக்கான விரிவான அறிக்கை வெளியீடு

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

சென்னை புறநகர் ரெயில் சேவைக்கான விரிவான அறிக்கையை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

சென்னை,

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி ரத்து செய்யப்பட்டன. இதன்படி இன்று 55 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டன.

இந்நிலையில் நாளை சென்னை புறநகர் ரெயில் சேவைக்கான விரிவான அறிக்கையை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

இதன்படி சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 7.45 முதல் இரவு 7.45 வரை புறநகர் ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

தாம்பரம் ரெயில்வே யார்டு பணிகளுக்காக காலை 10 மணி முதல் பகல் 1 மணி மற்றும் இரவு 10.30க்கு மேலான ரெயில்கள் ரத்து என முன்பே கூறப்பட்டிருந்தது. அந்த நேரங்களில் மட்டும் பல்லாவரம் – எழும்பூர், கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

As part of ongoing engineering works, Line Block/Power Block is permitted in #Chennai Egmore – #Villupuram section between Chennai Beach & Chennai Egmore railway stations on 28th July 2024Passengers are requested to take note on this & plan your #Travel#RailwayUpdatepic.twitter.com/QTh8JgWY4q

— DRM Chennai (@DrmChennai) July 27, 2024

You may also like

© RajTamil Network – 2024