நாளை பட்ஜெட் தாக்கல்… இன்று கூடுகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

நாளை பட்ஜெட் தாக்கல்… இன்று கூடுகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்… தமிழ்நாடு எம்.பி.க்கள் வைத்த கோரிக்கைகள் என்ன?மத்திய பட்ஜெட் 2024

மத்திய பட்ஜெட் 2024

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க இருக்கும் நிலையில் மத்திய அரசின் அழைப்பின் பேரில் டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

வழக்கமாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை இறுதியில் தொடங்கி நடைபெறும். ஆனால், மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால், மழைக்கால கூட்டத் தொடர், பட்ஜெட் கூட்டத் தொடராக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடர், இன்று தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். இதனிடையே, மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

விளம்பரம்

இதில், நாடாளுமன்ற விவகாரத்துறை கமிட்டி சார்பில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

இதையும் படிக்க:
நேரு முதல் மன்மோகன் சிங் வரை.. மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பிரதமர்கள்!

இந்த கூட்டத்தொடரில் பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா, 90 ஆண்டுகள் பழமையான விமான சட்டத்துக்கு மாற்றான சட்ட மசோதா, நிதி மசோதா உட்பட 6 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், எனவே இந்த மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

விளம்பரம்

இந்த நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நீட் விவகாரம், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறினர்.

இதனிடையே, 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை, மத்திய நிதிநிலை அறிக்கையில் விடுவிக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வருமான வரிச் சுமையை குறைக்க வேண்டும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் பத்தாண்டுகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்… எவ்வளவு தொகை தெரியுமா?

மேலும் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திட போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துவது உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என நம்புவதாகவும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3 ஆவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளதால், இந்த பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்புகள் மக்களிடையே அதிகரித்துள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
FINANCE MINISTER NIRMALA SITHARAMAN
,
Union Budget
,
Union Budget 2024

You may also like

© RajTamil Network – 2024