Tuesday, September 24, 2024

நிபா வைரஸ் பரவல் எதிரொலி.. தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் வாகனங்கள் முறையான சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

தென்காசி,

கேரள மாநிலத்தில் சமீப காலமாக நிபா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு நிபா வைரஸ் கண்டறியப்பட்ட மலப்புரம் பகுதியில் மத்திய சுகாதார துறையினர் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நிபா வைரஸ் பரவலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டம் தமிழக – கேரளா எல்லையான புளியரை பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் சோதனை சாவடி மையம் ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்களும், வாகனங்களும் முறையான சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

வெளவால்கள் மூலம் நிபா வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால், கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் பழங்களில் வெளவால்கள் கடித்து சேதம் அடைந்த பழங்கள் ஏதேனும் இருந்தால் அந்த வாகனத்தை சுகாதாரத் துறையினர் திருப்பி அனுப்பி வைத்து விடுகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024