Monday, September 23, 2024

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.

முதலாவது டெஸ்ட் போட்டி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 305 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 309 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. அந்த அணியில் முதல் இன்னிங்ஸில் கமிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 114 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் திமுத் கருணாரத்னே அதிகபட்சமாக 83 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் முதல் இன்னிங்ஸில் வில்லியம் ஓ’ரூர்கி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

275 ரன்கள் வெற்றி இலக்கு

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 340 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டாம் லாதம் 70 ரன்கள் குவித்தார். இலங்கை அணித் தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 309 ரன்கள் குவிக்க, நியூசிலாந்துக்கு 275 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பெங்களூருவில் ஒரு ஷ்ரத்தா மாடல் கொலை.. அதிர்ச்சி தரும் பின்னணி!

இலங்கை வெற்றி

275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்திருந்தது.

அந்த அணியில் டாம் லாதம் 28 ரன்களும், கேன் வில்லியம்சன் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ரச்சின் ரவீந்திரா தனி ஒரு ஆளாக போராடினார்.

5 ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடர்ந்த சில நிமிடங்களிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. ரச்சின் ரவீந்திரா 92 ரன்னிலும், ஓ’ரூர்கி 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அஜாஸ் படேல் 2 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இதன் மூலம் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.

திருப்பதி லட்டு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி வழக்கு!

இலங்கை அணித் தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 68 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிரபாத் ஜெயசூர்யாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இரண்டு தொடர்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

இரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசிப் போட்டி வருகிற வியாழக்கிழமை காலேயில் தொடங்குகிறது.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அணி தொடரைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024