Wednesday, October 30, 2024

நியூசி.க்கு எதிரான தொடரில் சிறந்த ஃபீல்டர் விருது..! ராதா யாதவ் தேர்வு!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

நியூசிலாந்து மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், இந்திய மகளிா் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றியது இந்திய மகளிா் அணி.

இந்த ஆட்டத்தில் முதலில் நியூசி. 49.5 ஓவா்களில் 232 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியா 44.2 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.

இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணியில் ராதா யாதவ் சிறப்பாக ஃபீல்டி செய்தார்.

6 மகளிர்கள் சிறந்த ஃபீல்டிங்குக்காக அண்யில் தேர்வாகியிருந்தார்கள். இறுதியில் ராதா யாதவ் வெற்றி பெற்றார்.

இதை விடியோவாக பிசிசிஐ மகளிர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையிலும் ராதா யாதவ் சிறப்பாக ஃபீல்டிங் செய்தது குறிப்பிடத்தக்கது.

| #INDvNZ
A memorable reveal at the iconic Hall of Fame ️
Join #TeamIndia in a game of to find out the winner of the fielding medal – By @mihirlee_58@GCAMotera | @IDFCFIRSTBankpic.twitter.com/NRfCGfzNBW

— BCCI Women (@BCCIWomen) October 30, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024