நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி புதன்கிழமை தொடங்கவிருந்த நிலையில், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் போடாமலேயே கைவிடப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று காலை டாஸ் போடப்பட்ட நிலையில், இந்திய அணி வென்று பேட்டிங்கை தேர்வு செய்து 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி 19 ஓவரில் 78/1 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பந்துவீசிய நியூசிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் மார் ஹென்றி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இதையும் படிக்க:செஸ்: உலக சாதனை படைக்கவிருக்கும் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி..!
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் கைப்பறிய நியூசிலாந்தின் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்த நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் (போட்டிகள் அடிப்படையில் )
25- ரிச்சார்ட் ஹாட்லி
26- நீல் வாக்னர்
26 – மாட் ஹென்றி
27 – புரூஸ் டெய்லர்