நியூஸி. டெஸ்ட்: சண்டிமால் சதத்தால் 306 ரன்கள் எடுத்தது இலங்கை!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 306 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காலே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

பங்குச் சந்தை தொடர்ந்து உயர்வு: சென்செக்ஸ் 666 புள்ளிகளுடனும், நிஃப்டி 211 புள்ளிகளுடன் நிறைவு!

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தனஞ்செயா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணரத்னே இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே இலங்கை அணிக்கு நியூசிலாந்து கேப்டன் சௌதி, நிசங்காவின் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். பதும் நிசங்கா 1 ரன்னில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார்.

அவருக்குப் பின் தினேஷ் சண்டிமால் கருணரத்னேவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 2-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்த நிலையில் கருணரத்னே 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

வேலைவாய்ப்பு முறையை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார் பிரதமர் மோடி: ராகுல் குற்றச்சாட்டு

4-வது வரிசையில் களம் புகுந்த ஏஞ்சலோ மேத்யூஸ் இருவரும் பொறுப்புடன் விளையாடினர். இருவரும் சேர்ந்து 3 வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த நிலையில் தினேஷ் சண்டிமால் 116 ரன்களில் பிலிப்ஸ் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். சண்டிமாலுக்கு இது 16-வது டெஸ்ட் சதமாகவும் பதிவானது. அவருக்குப் பின்னர் வந்த கமிந்து மெண்டிஸும் அரைசதம் விளாசி அசத்தினார்.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் மெண்டிஸ் 51 ரன்னிலும், மேத்யூஸ் 78 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இலங்கை 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் சேர்த்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதி, பிலிப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

நான் செய்தேன்.. பெங்களூரு மகாலட்சுமி கொலையாளியின் தற்கொலைக் கடிதம்

Related posts

Indian Army is developing indigenous Sensor Fuzed Munitions

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்