Monday, September 23, 2024

நிலக்கரி ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கியது!

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

நிலக்கரி ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கியது!அதிமுக ஆட்சியில் அதானி குழுமம் நிலக்கரி ஊழலில் ஈடுபட்டதாக புகார்.கோப்புப்படம்கோப்புப்படம்

அதிமுக ஆட்சி காலகட்டத்தில் தமிழக மின்வாரியத்துக்காக அதானி குழுமம் இறக்குமதி செய்த நிலக்கரியில் மோசடி நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கியுள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து சில மாதங்களுக்கு முன்பு, ’ஃபைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட செய்தியில், இந்தோனேசியாவிலிருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு மிகக் குறைவான விலையில் வாங்கிய தரமற்ற நிலக்கரியை, உயர்தர நிலக்கரி என்று தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு வாங்கியதைவிட கூடுதலாக மூன்று மடங்கு விலைக்கு அதானி குழுமம் விற்றதாகவும் ரூ. 3,000 கோடி லாபம் அடைந்ததாகவும் ஒரு ஆய்வைக் குறிப்பிட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னதாகவே, அதிமுக ஆட்சியில் நடைபெற்ற நிலக்கரி ஊழல் தொடர்பாக 2018-ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளது.

இந்த நிலையில், அறப்போர் இயக்கம் அளித்த புகார் மீது விசாரணையை தொடங்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் விசாரணை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

© RajTamil Network – 2024