நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்

by rajtamil
0 comment 36 views
A+A-
Reset

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சீன விண்கலம் மணல், பாறை மாதிரிகளை சேகரிக்கும் என்று கூறப்படுகிறது.

பீஜிங்,

நிலவின் தென் துருவப் பகுதியில் முதன்முதலில் இந்தியா தனது சந்திராயன்-3 விண்கலத்தை இறக்கி கடந்தாண்டு சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து தற்போது சீனாவும் அந்தப் பகுதியில் தனது விண்கலத்தைத் தரையிறக்கியுள்ளது.

நிலவின் மறுபகுதிக்கு விண்கலங்களை அனுப்புவது மிகவும் சவாலான ஒன்று. மிகவும் கரடுமுரடான, பூமியை எதிர்கொள்ளாத பின்பகுதி என்பதால் பூமியுடன் தகவல் தொடர்பைப் பராமரிக்க இடையே ஒரு இணைப்புச் (ரிலே) செயற்கைகோள் தேவைப்படுகிறது.

பீஜிங் நேரப்படி காலை 6.23 மணிக்கு தென் துருவப் பகுதியிலுள்ள எய்ட்கென் பேசின் எனப்படும் பெரிய பள்ளத்தில் சாங்'இ-6 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதாக சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சாங்'இ மூன் எனப்படும் நிலவைக் குறிப்பிடும் சீனக் கடவுளின் பெயரைக் கொண்ட இந்த நிலவு ஆராய்ச்சித் திட்டத்தில் இது 6-வது விண்கலமாகும். இந்த விண்கலம், 2 நாட்கள் ஆய்வில் ஈடுபட்டு தனது இயந்திரக் கை மற்றும் துளையிடும் கருவியைக் கொண்டு 2 கிலோகிராம் அளவு மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதி மணல், பாறை மாதிரிகளை சேகரிக்கும். பின்னர் அந்த மாதிரிகள் நிலவைச் சுற்றி வரும் லேண்டருக்கு மாற்றப்பட்டு, அந்த லேண்டர் வருகிற ஜூன் 25 அன்று பூமிக்குத் திரும்பி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024