நிலவில் இதெல்லாம் இருக்கா? – சந்திரயான் 3 அனுப்பிய செம அப்டேட்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

நிலவில் எரிமைலைக் குழம்பா? சந்திரயான் 3 அனுப்பிய புதிய தகவலால் விஞ்ஞானிகள் ஆர்வம்!சந்திரயான் 3

சந்திரயான் 3

சந்திரன் உருவாகும்போது அதில் எரிமலைக்குழம்பு போன்று நெகிழும் தன்மை கொண்ட மாக்மா கடல் இருந்துள்ளதாக சந்திரயான் 3 அனுப்பிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டது.

அதன் ஓராண்டு நிறைவுயையொட்டி, நிலவு குறித்து சந்திரயான் 3 அனுப்பிய புதிய தகவல்களை இந்திய விண்வெளித் துறையின் அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நிலவின் மேற்பகுதி கரடுமுரடான பாறைகளால் உருவாகி இருந்தாலும், சில இடங்களில் திரவம் போன்ற பொருள் மேற்பரப்பில் மிதந்து சென்றதற்கான வழித்தடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

விளம்பரம்

அதாவது, ரோவர் தரையிறங்கிய இடத்தைச் சுற்றி 50 மீட்டர் வரை மென்மையான மேற்பரப்புகள் இருந்ததாகவும், அந்த பகுதியில் பள்ளங்கள், கற்பாறைகள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள்? அமெரிக்க செல்லும் முன் முதல்வர் ஸ்டாலின் அதிரடி

இதனால் நிலவு உருவான போது அதன் மீது மிகப்பெரிய மாக்மா கடல் இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதை பிரக்யான் ரோவரின் APXS X-ray Fluorescence Spectroscopy உறுதி செய்துள்ளதாகவும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
chandrayaan

You may also like

© RajTamil Network – 2024