நிலவில் மிகப்பெரிய குகை: மனிதர்கள் தங்குவதற்கு உதவலாம்!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

நிலவில் மிகப்பெரிய குகை: மனிதர்கள் தங்குவதற்கு உதவலாம்!நிலவில் மிகப்பெரிய குகை இருப்பதைக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள், எதிர்காலத்தில் நிலவில் ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் தங்குவதற்கு உதவலாம் என்ற நம்புகிறார்கள்.நிலவின் நிலப்பரப்பு – கோப்புப்படம்

நிலவில் 55 ஆண்டுகளுக்கு முன்பு, முதல் முறையாக கால் தடம் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்டிரின் குழுவினர் தரையிறங்கிய பகுதிக்கு அருகே, மிகப்பெரிய குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலிய விஞ்ஞானி தலைமையிலான குழு, திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், நிலவின் தரைப்பகுதியில் மிகப்பெரிய குகை போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிராகுலிட்டி என்ற கடற்பரப்புக்கு அருகே அப்போலோ 11 தரையிறங்கிய இடத்திலிருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நிலவின் நிலப்பரப்பில் ஒரு பெரிய குகை மற்றும் அதுபோன்ற 200க்கும் மேற்பட்டவை கண்டறியப்பட்டுள்ளன. இவை, லாவா குழம்புகளின் வழித்தட வெடிப்பினால் ஏற்பட்டவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

நிலவில் இருக்கும் குகை போன்ற அமைப்புகள் கடந்த 50 ஆண்டுகாலமாக மர்மமாகவே உள்ளன. ஆனால் தற்போது இந்த குகைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நாசாவின் எல்ஆர்ஓ மூலமாக, குகைகளின் அளவுகளை அளவிட்டு, அதனை, பூமியில் உள்ள லாவா குழாய்களோடு ஒப்பிட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரேடார் தகவல்கள், நிலப்பரப்பில் உள்ள குகையின் முதற்கட்ட ரகசியத்தைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறது. அவை 40 மீட்டர் அகலமும், கிட்டத்தட்ட 10 அடி நீளமும் கொண்டிருக்கலாம் என அளவிடப்பட்டுள்ளது. இதுபோன்று நிலவின் தென்துருவத்திலும் இருக்கலாம் என்றும், விரைவில் நாசா அப்பகுதியில் சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த குகைகளுக்குள் நீர் உறைந்திருப்பதால், அவை அங்கு ஆய்வு செய்யச் செல்லும் விஞ்ஞானிகளுக்கு குடிநீராகவோ அல்லது ராக்கெட் எரிபொருளாகாவோ பயன்படலாம் என கூறப்படுகிறது.

1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங், ஆல்டிரின் தொடங்கி, நாசாவின் அப்போலோ திட்டம் மூலம் 12 விஞ்ஞானிகள் நிலவில் கால்தடம் பதித்துள்ளனர்.

முதற்கட்ட ஆய்வுகளில், நிலவில் நூற்றுக்கணக்கான பள்ளங்களும் ஆயிரக்கணக்கான லாவா பாதைகளும் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குகை போன்ற அமைப்புகள், எதிர்காலத்தில் நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ள செல்லும் விஞ்ஞானிகளுக்கு தங்குமிடமாகவும் இது, காஸ்மிக் கதிர்கள், சூரியக் கதிர்களிடமிருந்து விஞ்ஞானிகளைக் காக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024