நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களைக் குறிவைக்கும் மோசடி கும்பல்!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

ஏற்கனவே நீட் தேர்வில் நடந்த முறைகேடு மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் நீட் தேர்வு எழுதிய மற்றும் எழுதவிருக்கும் மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நிலையில், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை குறிவைத்து ஒரு மோசடி நடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மோசடி கும்பல் ஒன்று, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து மாணவர்களை தொடர்புகொண்டு, பெரிய பெரிய மருத்துவக் கல்லூரிகளில் இடம்வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்து வருவது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 12 மாணவர்களிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு பல கோடிக் கணக்கான பணத்தை பறித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதயநிதி பதவியேற்கும் நாள் முகூர்த்த நாளாகத்தான் இருக்கும்: சொன்னவர் யார்?

நாட்டில் உள்ள மிகப்பெரிய மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ இடம்பெற்றுத் தருவதாகவும், அதற்கு ரூ.30 முதல் 40 லட்சம் தேவைப்படும் என வலைவிரிக்கிறார்கள்.

இது குறித்து 21 வயது மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். அதில், மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக ஆகஸ்ட் 27ஆம் தேதி ஒரு பெண் தொலைபேசியில் கூறியதாகவும், அதற்கு ரூ.35 லட்சம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அவர்களை நேரில் சந்தித்தபோது, நாட்டில் உள்ள முக்கயிமான ஐந்து கல்லூரிகளின் பட்டியலை அளித்து, எதில் சேர்க்கை வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஒன்றைத் தேர்வு செய்ததும், முன்பணமாக ரூ.7.5 லட்சம் கேட்டுள்ளனர். இது குறித்து மாணவரும் பெற்றோரும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

அப்போதுதான் காவல்துறையினருக்கு இந்த தகவல் தெரிய வந்தத. இதையடுத்து, அந்த மோசடி கும்பலைப் பிடிக்க திட்டமிட்டு, பணம் கொடுப்பதாக அழைத்துள்ளனர். பணம் வாங்க வந்தவர்களை கைது செய்து அவர்களிடம் முறைப்படி விசாரணை நடந்து வருகிறது. குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களின் விவரங்களை எப்படி மோசடி கும்பல் பெறுகிறது என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024