நீட் தேர்வில் டாப்பு… 12ம் வகுப்பில் பிளாப்பு… குஜராத் மாணவி

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

நீட் தேர்வில் டாப்பு… 12ம் வகுப்பில் பிளாப்பு… Fail மாணவி டாக்டர் ஆவதால் அதிர்ச்சி!நீட் தேர்வு

நீட் தேர்வு

நீட் தேர்வில் 705 டாப் மதிப்பெண்கள் பெற்ற குஜராத் மாணவி, இயற்பியல் துணைத் தேர்வில் 22 மதிப்பெண்களும் வேதியியல் துணைத் தேர்வில் 31 மதிப்பெண்களும் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 720 க்கு 705 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இயற்பியலில் 99.89 சதவிகிதமும், வேதியியலில் 99.14 சதவிகிதமும், உயிரியியலில் 99.14 சதவிகிதமும் என ஒட்டுமொத்த சராசரி 99.94 சதவிகிதம் பெற்று தரவரிசையில் இடம் பிடித்திருந்தார்.

விளம்பரம்

இது சிறந்த மருத்துவக் கல்லூரியில் இடத்தை பெறுவதற்கான மதிப்பெண் ஆகும். ஆனால், உயர்நிலைக்கல்வியில் தேர்ச்சி பெறாமல் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. ஏற்கனவே, 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் தேர்ச்சி பெறாத இந்த மாணவி, துணைத் தேர்வுகளை எழுதி வந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற துணைத் தேர்வையும் கூட எழுதியுள்ளார். துணைத் தேர்வில் முதல் முயற்சியில், இயற்பியல் பாடத்தில் 21 மதிப்பெண்களை பெற்றிருந்த மாணவி, இம்முறை வெறும் 22 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளார். இதே போன்று, வேதியியல் பாடத்தில் இரண்டாவது முறையாக எழுதிய துணைத் தேர்வில் 33 மதிப்பெண்களை பெற்ற மாணவி, இம்முறை 31 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார்.

விளம்பரம்இதையும் படிங்க: அரசு விரைவு பேருந்து தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு – அதிரடி அறிவிப்பு

இயற்பியல், வேதியியல் பாடத்தில் துணைத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவி, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருக்கும் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Neet Exam
,
NEET Result

You may also like

© RajTamil Network – 2024