Saturday, September 21, 2024

நீட் தேர்வு குறித்து சராமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் !

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

400 கோடி ரூபாய் வசூலித்துவிட்டு வினாத்தாளை ரிக்‌ஷாவில் அனுப்புவீங்களா… சராமாரியாக கேள்வியெழுப்பிய உச்சநீதிமன்றம் !நீட்

நீட்

மாணவர்களிடம் 400 கோடி ரூபாய் வசூலித்துவிட்டு, நீட் வினாத்தாளை ரிக்‌ஷாவில்தான் அனுப்புவீர்களா என தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தேர்வுக்கு 45 நிமிடங்களுக்கு முன்பாகத்தான் வினாத்தாள் கசிந்தது என்ற மத்திய அரசின் வாதம் நம்பும்படியாக இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

பல்வேறு முறைகேடுகள் நடந்ததால் இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு மீண்டும் விசாரணை நடத்தியது

விளம்பரம்

நீட் தேர்வு முடிவுகள் குறித்து ஆய்வறிக்கையை தயார் செய்த சென்னை ஐஐடி-யின் இயக்குநர் காமகோடி நேரில் ஆஜரானார்.அப்போது, தேசிய தேர்வு முகமையில் உறுப்பினராக உள்ள ஐஐடி இயக்குநர் அளித்த அறிக்கையை ஏற்க முடியாது என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அறிக்கையை தயார் செய்த ஐஐடி இயக்குநர் தேசிய தேர்வு முகமையின் உறுப்பினராக இல்லை என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஐஐடி அறிக்கை அடிப்படையில் பார்த்தால், மத்திய அரசின் பதில் முழுமையாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

இதையடுத்து, வினாத்தாளை அனுப்பியதில் கவனக்குறைவுடன் செயல்பட்டுள்ளதாகவும்,
6 நாட்கள் வரை தனியார் கொரியர் நிறுவனத்திடம் வினாத்தாள் இருந்ததாகவும், ஜார்கண்ட்டில் ரிக்‌ஷா மூலம் வினாத்தாள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதையும் படிக்க:
வெள்ளை நிறத்தில் பிறந்த எருமை கன்று… ஷாக்கான மக்கள்! – எங்கு தெரியுமா?

அப்போது, மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணமாக 400 கோடி ரூபாய் வசூலித்து விட்டு, ரிக்‌ஷாவில் வினாத்தாளை அனுப்புவீர்களா? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், வினாத்தாள் கசிவு குறித்து விளக்கம் அளித்த மத்திய அரசு தரப்பு, ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மையத்தில் மட்டும், தேர்வு நடைபெற்ற மே 5-ஆம் தேதி வினாத்தாள் கசிந்ததாக தெரிவித்தது.

விளம்பரம்

ஆனால், வினாத்தாள் கசிந்தது, அதற்கான விடைகளை தயார் செய்தது, அவற்றை மாணவர்களுக்கு விநியோகித்தது, பின்னர் மாணவர்கள் விடைகளை மனப்பாடம் செய்தது என அனைத்தும் 45 நிமிடங்களுக்குள் நடந்தது என்பது, ஏற்க முடியாத வகையில் இருப்பதாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 7 பேர் கொண்ட கும்பல் வினாக்களை பிரித்து, விடைகளை கண்டுபிடித்ததாக குறிப்பிட்டார். ஆனால், தேர்வுக்கு முதல் நாளே வினாத்தாள் கசிந்தது என பீகார் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் இருப்பதாக மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியது.

விளம்பரம்

வினாத்தாள் பல இடங்களுக்கு பரவியதற்கான உறுதியான ஆதாரங்களை வழங்காத வரை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என தெரிவித்த நீதிபதிகள்,பீகார் காவல்துறையின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், மாணவர்களின் விவரங்களை மறைத்து, தேர்வு மையங்கள் மற்றும் நகரங்கள் வாரியான முடிவுகளை தனித்தனியாக நாளை பிற்பகல் 12 மணிக்குள் வெளியிட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டனர்.

கிராம்பு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!
மேலும் செய்திகள்…

இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில், நீட் வினாத்தாளுக்கான விடைகளை தயார் செய்து வழங்கியதாக, பீகார் மாநிலம் பாட்னா எய்ம்ஸ்-இல் படிக்கும் எம்பிபிஎஸ் மாணவர்கள் 4 பேரை கைது செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
neet
,
Neet Exam
,
Supreme court

You may also like

© RajTamil Network – 2024