Saturday, September 21, 2024

நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? – அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில்

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

நீட் தேர்வு ரத்து செய்யப்படாது – மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்நீட் தேர்வு குறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்

நீட் தேர்வு குறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்

நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நீட் மற்றும் நெட் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக நாடு முழுவதும் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிகார் மாநிலத்தில் நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்த விசாரணை அறிக்கையை அம்மாநில அரசு விரைவில் வழங்க உள்ளதாகக் கூறினார்.

நீட் தேர்வில் ஏதோ ஒரு பகுதியில் நடந்த முறைகேடு காரணமாக, நேர்மையாக தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
இன்று மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை… கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்!

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய மத்திய அமைச்சர், நீட் தேர்வில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

“டார்க் வெப்” இணையதளத்தில் ‘நெட்’ வினாத்தாள் கசிந்ததால் நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகக் கூறிய தர்மேந்திர பிரதான், தேசிய தேர்வு முகமை நடைமுறைகளை மாற்றியமைக்க முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக உயர்மட்டக் குழு அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Dharmendra Pradhan
,
Neet Exam
,
NET

You may also like

© RajTamil Network – 2024