நீட் வினாத்தாள் கசிவு: முக்கிய குற்றவாளியை கைது செய்த சிபிஐ!

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

நீட் வினாத்தாள் கசிவு: முக்கிய குற்றவாளியை கைது செய்த சிபிஐ!பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளியை ஆஜர்படுத்திய சிபிஐசிபிஐ | கோப்புப் படம்சிபிஐ | கோப்புப் படம்

நீட் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராக்கி என்கிற ராகேஷ் ரஞ்சனை வியாழக்கிழமை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளது.

வினாத்தாள் கசிவு வழக்கில் மூளையாக செயல்பட்டதாக தெரிவிக்கப்படும் சஞ்சீவ் முக்யாவுக்கு சொந்தக்காரரான நாளந்தாவை சேர்ந்த ராக்கி பாட்னாவின் நகர்ப்புறத்தில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

நீட் முறைகேடு அம்பலமானதிலிருந்து ராக்கியை தேடும் பணி நடந்து வந்த நிலையில் அவரை கைது செய்த சிபிஐ பாட்னாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அவரை சிபிஐ 10 நாளுக்கான விசாரணை காவலில் எடுத்துள்ளது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் பிகார் மற்றும் ஜார்க்கண்டில் 15 இடங்களில் சோதனையில் ஏற்பட்ட சிபிஐ ஆதாரங்களை சேகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக ஜார்க்கண்ட்டில் உள்ள ஹசாரிபாக் மையமான ஓயாசிஸ் பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் நீட் தேர்வர்களுக்கு இடம் கொடுத்த குற்றத்தில் கைது செய்யப்பட்டனர். வினாத்தாள்களை தீயிலிட்ட ஆதாரங்கள் பிகார் காவல்துறையால் பெறப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ இதுவரை ஆறு எப்ஐஆர்கள் பதிவு செய்துள்ளது. பிகாரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவலறிக்கை வினாத்தாள் கசிவு தொடர்புடையது, மற்ற மாநிலங்களில் உள்ள எப்ஐஆர்கள் ஆள்மாறாட்டம், மோசடி தொடர்புடையவை.

மத்திய அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் விரிவான விசாரணைக்கான எப்ஐஆர் ஒன்று சிபிஐ பதிவு செய்துள்ளது. இதன்பேரில் விசாரணை தொடர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024