Monday, September 23, 2024

“நீதி நிலைநாட்டப்படும்” ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

“காவல்துறை பாரப்பட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமை ஆற்றும்…” – ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் உறுதிஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதல்

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதல்

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அவரது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் உறுதி அளித்துள்ளார்.

கடந்த 5 ஆம் தேதி, சென்னை பெரம்பூரில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அயனாவரத்தில் ஆம்ஸ்ட்ராங் தற்காலிகமாக குடியிருந்து வந்த இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

விளம்பரம்

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று அவரது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவையொட்டி, அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி திருமதி. பொற்கொடி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
கொலை… pic.twitter.com/OaoHp0J8Xv

— M.K.Stalin (@mkstalin) July 9, 2024

விளம்பரம்

இது அனைவருக்குமான அரசு என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கப்படும் என்று கூறியுள்ளார்.
காவல்துறை பாரப்பட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமை ஆற்றும் என்று கூறிய முதலமைச்சர், நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதில், தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை பெருநகர் காவல் ஆணையர் அருண் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அருண் நேற்று புதிதாக பொறுப்பேற்ற நிலையில், இன்று முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
armstrong
,
Armstrong Murder
,
CM MK Stalin
,
MK Stalin

You may also like

© RajTamil Network – 2024