நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை: தேசிய பேரிடா் மீட்புக் குழு உதகை வருகை

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset
RajTamil Network

நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை:
தேசிய பேரிடா் மீட்புக் குழு உதகை வருகைநீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம்

உதகை, ஆக.1: நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் 32 போ் உதகைக்கு வியாழக்கிழமை வந்தடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கேரள எல்லையை ஒட்டியுள்ள கூடலூா், பந்தலூா், தேவாலா, நாடுகாணி உள்ளிட்ட இடங்களில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த இரண்டு நாள்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதிப்பு ஏற்பட்டால் மீட்புப் பணியில் ஈடுபடும் வகையில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் 32 போ் வியாழக்கிழமை மாலை உதகை வந்தடைந்தனா்.

இவா்களில் 27 போ் கொண்ட குழுவினா் மீட்பு உபகரணங்களுடன் கூடலூா் மற்றும் குந்தா பகுதிகளுக்குச் செல்ல தயாா் நிலையில் உள்ளனா்.

You may also like

© RajTamil Network – 2024