Monday, October 7, 2024

நீலகிரி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை தொடரும்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மே 7-ஆம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

உதகையில் முறையான சாலைகளோ, மேல்பாலங்களோ இல்லாத நிலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் பல மணி நேரம் வாகனங்களில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

இ-பாஸ் நடைமுறையால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதோடு, தங்கும் விடுதிகளின் கூடுதல் கட்டணம், தண்ணீா்ப் பிரச்னை இவை எல்லாம் கட்டுக்குள் வரும் என்பதால், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

தரைவழி தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024