Monday, September 23, 2024

நெல்லை: தொடர் மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

பாபநாசம் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் பெய்த தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்றான 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் நீ்ர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று 117.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 843 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்துக்கு வினாடிக்கு 1,098 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாததால், இதே நாளில் பாபநாசம் அணையில் 70.60 அடி நீர்மட்டம் இருந்தது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால், கடந்த ஆண்டு இதே நாளில் இருந்ததைவிட தற்போது சுமார் 47 அடிக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.

இதேபோன்று 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 127.30 அடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் அணையில் 80.87 அடி நீர்மட்டம் இருந்தது.

கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத நிலையில், தற்போது நல்ல மழை பொழிந்து அணைகளில் நீர் இருப்பு அதிகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்

You may also like

© RajTamil Network – 2024