நேசிப்பாயா டீசர் அறிவிப்பு!

by rajtamil
Published: Updated: 0 comment 6 views
A+A-
Reset

இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் நேசிப்பாயா படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கி வருகிறார். ‘நேசிப்பாயா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார்.

காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், இதன் டீசர் வருகிற செப். 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குட் பேட் அக்லியில் த்ரிஷா?

You may also like

© RajTamil Network – 2024