'நேதாஜியின் படையை வலுப்படுத்த முத்துராமலிங்கத் தேவர் துணையாக நின்றார் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் நடிகரும், த.வெ.க. கட்சியின் தலைவருமான விஜய், தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார், இந்திய விடுதலைக்காக காத்திரமாக களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர்.
நாடாளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக… pic.twitter.com/7PyrVNbid4
— TVK Vijay (@tvkvijayhq) October 30, 2024