Saturday, September 21, 2024

நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.சர்மா ஒலி!

by rajtamil
0 comment 26 views
A+A-
Reset

நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.சர்மா ஒலி!கே.பி.சர்மா ஒலி நான்காவது முறையாக பதவியேற்றுள்ளார்.நேபாளத்தின் பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்றார்நேபாளத்தின் பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்றார்

நேபாள நாட்டின் புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவா் கே.பி.சர்மா ஒலி திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

அந்நாட்டின் பிரதமராக சர்மா ஒலி நான்காவது முறையாக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேபாள நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமா் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா தோல்வியடைந்தாா். இதையடுத்து அதிபரைச் சந்தித்த கே.பி.சா்மா ஒலி, தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தாா்.

அதிபா் ராம் சந்திர பவுடலால் புதிய பிரதமராக சா்மா ஒலியை ஞாயிற்றுக்கிழமை நியமித்த நிலையில், இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி- மாவோயிஸ்ட் மையம் (சிபிஎன்-எம்சி) தலைவரான பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவா் சா்மா ஒலி கடந்த வாரம் திரும்பப் பெற்றாா்.

இருவருக்கும் இடையே அண்மைக்காலமாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடா்ந்து இந்த முடிவை எடுத்த சா்மா ஓலி, நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவா் ஷோ் பகதூா் தேவுபாவுடன் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைப்பதாக அறிவித்தாா். இதையடுத்து பிரதமா் பதவியை ராஜிநாமா செய்வதைத் தவிா்த்து, பிரசண்டா நம்பிக்கை வாக்கெடுப்பை எதிா்கொண்டு தோல்வி அடைந்தார்.

மீதமுள்ள 3 ஆண்டுகள் ஆட்சி காலத்தில் கூட்டணி ஒப்பந்தப்படி, முதல் ஒன்றரை ஆண்டுகள் கே.பி.சர்மா ஒலி பிரதமராக செயல்படவுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024