நேபாள வெள்ளத்தில் பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் 90-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் கடந்த மூன்று நாள்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகரில் ஒருசில பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் குடியிருப்பாளர்கள் மேல் தளங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை கிட்டத்தட்ட 90-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் இருந்து சுமார் 1000 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

சொல்லப் போனால்… செந்தில் பாலாஜியும் 4.34 லட்சம் விசாரணைக் கைதிகளும்!

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 3,000 பாதுகாப்புப் பணியாளர்கள் கொண்ட மீட்புக் குழு நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மீட்புப் பணிகளில் உதவுமாறு நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நேபாளம் முழுவதும் 44 இடங்களில் முக்கிய நெடுஞ்சாலைகள் தடுக்கப்பட்டுள்ளன. மேலும், மழை காரணமாக காத்மாண்டுவின் பெரும்பாலான பகுதகளில் மின்சாரமும் இணையமும் துண்டிக்கப்பட்டது.

நெடுஞ்சாலைகளில் இரவில் பேருந்துகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான வானிலையால் முக்கிய சாலைகள் முடக்கப்பட்டது. சர்வதேச விமான சேவை இயக்கப்பட்டாலும், உள்நாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மழை வார இறுதியிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேபாளத்தில் பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கி பொதுவாக செப்டம்பர் நடுப்பகுதியில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024