Saturday, September 21, 2024

நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்; இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அமண்டா அனிசிமோவா

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

கனடாவின் டொரண்டோவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

டொரண்டோ,

கனடாவின் டொரண்டோவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, சகநாட்டவரான எம்மா நவரோ உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமண்டா அனிசிமோவா 6-3, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

WELCOME TO YOUR FIRST WTA 1000 FINAL @AnisimovaAmanda
The 22-year-old defeats compatriot Emma Navarro to reach her biggest career final at the #[email protected]/SEgNQp8KUs

— National Bank Open (@NBOtoronto) August 11, 2024

You may also like

© RajTamil Network – 2024